திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர்
(வரிசை எண். பெரியபுராண புத்தகத்தில் திருஞானசம்பந்த சுவாமி புராணாம் பாடல் எண். / திருஞானசம்பந்த சுவாமி தேவார புத்தக பக்க எண்)
1. 76 / 38
செம்மைபெற எடுத்ததிருத் "தோடுடைய செவியன்" எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மைஅடையா ளங்களுடன் சாற்றித் தாதையார்க்(கு)
"எம்மையிது செய்தபிரான் இவனன்றே" எனஇசைத்தார்.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
2. 102 / 167
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளுவானை
மைந்நிறைந்த மிடற்றானை "மடையில்வா ளைகள்பாய" என்னும் வாக்கால்,
கைந்நிறைந்த ஒத்தறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
3. 107 / 100
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
4. 115 / 353
"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்
"நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளரால்வாரி வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலும் நமர்காள்.
5. 120 / 356
கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
6. 122 / 23
வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று)
ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே
7. 126 / 29
மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச்
செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்தி
முப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடி
ஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
8. 162 / 1
ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
9. 166 / 5
செய்ய சடையார் திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம் பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம் அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக் கும்பிட் டணைவுறுநாள்.
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காணநின் றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதி யம்மய லேததும்ப
வெந்தவெண் ணீறுமெய் பூசும் வேட்கள நன்னக ராரே.
10. 167 / 10
கைம்மான் மறியார் கழிப்பாலை புள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடி விரைக்கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட் டருந்தமிழும் பாடினார்.
புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழித் தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உணவார் கழல்கை தொழுதுள் குதுமே.
11. / 12
வெந்த குங்கு லியப்புகை விம்மவே
கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.
12. 174 / 3
"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம்
கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
13. 180 / 627
அங்கு நின்றெழுந் தருளிமற் றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாம்இனி துறையுநற் பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுதுகுன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
14. 182 / 630
வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக் குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங் கோயிலை நண்ணிஅங் குள்புக்குத்
தேனலம்புதண் கொண்றையார் சேவடிதிளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.
15. 183 / 638
தாழ்ந் தெழுந்துமுன் "முரசதிர்ந் தெழும்" எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி,
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத் தாறொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே.
16. 184 / 619
ஆங்கு நாதரைப் பணிந்துபென் ணாடகம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
"தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்" எனும்இசை செய்யவாய் மலர்வித்தார்
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீ ரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்கும் கெழுமனைகள் தோறும் மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே.
17. 214 / 617
"எந்தை ஈசன்" எனஎடுத்(து) "இவ்வருள்
வந்த வாறுமற் றெவ்வண மோ?" என்று
சிந்தை செய்யுந் திருப்பதி கத்திசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
18. 237 / 248
மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு(து)
எண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயக வுட்கிடம தென்பர்
மணணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினோலி கொண்டுபயில் கின்றபழு வூரே.
19. 239 / 220
அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.
20. 248 / 211
வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
21. 266 / 746
மந்திரங்க ளானஎலாம் அருளிக் செய்து மற்றவற்றின் வைதிக நூற்சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாம் செழுமறையோர்க் கருளிஅவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்று முதலாகும் முதல்வனார் எழுத்தஞ்(க) என்பார்
அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மே"என் றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
22. 291 / 180
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனல்பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையுங் கூடத் தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார் கோடிகா விற்சென் றடைந்தார்.
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேல்
தாங்கினார் இடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
23. 295 / 213
திருந்துதே வன்குடி மன்னுஞ் சிவபெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப் போற்றிவ ணங்கிப் புரிவார்
"மருந்தொடு மந்திரமாகி மற்றும்இ வர்வேட மாம்"என்று
அருந்தமிழ் மாலைபு னைந்தார் அளவில்ஞா னத்தமு துண்டார்.
மருந்துவேண் டில்லிலை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
24. 301 / 231
வந்தணைந்த திருத்தொண்டர் மருங்குவர மான்ஏந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை முன்இறைஞ்சி நண்ணும் போதில்
"ஐந்துபுலன் நிலைகலங்கும் இடத்தஞ்சல் என்பார்தம் ஐயா(று)" என்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான் அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே.
25. 303 / 234
"கோடல்கோங் கங்குளிர்கூ விளம்" என்னுந் திருப்பதிகக் குலவுமாலை
நீடிபெருந் திருக்கூத்து நிறைந்த திருஉள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம் ஐயனே" என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடுங் கண்பொழிநீர் பரந்து பாய.
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழல் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.
26. 306 / 245
செங்கைமான் மறியார்தந் திருமழபா டிப்புறத்துச் சேரச் செல்வார்
"அங்கையார் அழல்" என்னும் திருப்பதிகம் எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினா வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார்" எனத்தொழுது போற்றிசைத்தே கோயில் புக்கார்.
அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யால்தொழு வார்தக வாளரே.
27. 307 / 242
மழபாடி வயிரமணி தூண்அமர்ந்து மகிழ்கோயில் வலங்கொண்டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக் கீழ்ச் சென்றுதாழ்ந் தெழுந்துநின்று
தொழுதாடிப் பாடி நறுஞ் சொன்மாலைத் தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.
களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.
28. 318 / 264
அணிகிளர்தா ரவன்சொன்ன மாற்றம்அரு ளொடுங்கேட்டந் நிலையின் நின்றே
பணிவளர்செஞ் சடைப்பாச்சின்மேய பரம் பொருளாயி னாரைப்பணிந்து
"மணிவளர்கண் டரோமங்கையைவாட மயல்செய்வ தோஇவர் மாண்ப"தென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பை நாதர்
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமே லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே.
29 322 / 262
பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழ்ல் பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ் சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து தடந்திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே
30 335 / 738
"அவ்வினைக் கிவ்வினை" என்றெடுத்து "ஐயர் அமுதுசெய்த
வெவ்விடம் முந்தடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத் தும்அடியார் இடர் காப்பது கண்டம்" என்றே
"செய்வினை தீண்டா திருநீல கண்டம்" எனச்செப்பினார்.
அவ்வினை கிவ்வினை யாமென்றும் சொல்லு ம தறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழ்ல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
31. 344 / 274
செம்மணி வாரி அருவிதூங்மும் சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வைசாத்துங் கண்ணுதலாரைக் கழல்ணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உள்ங்குளிர விளங்கிய சொற்றமிழ் மா¨வேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ள்ங் குளிரும்மே.
32. 345 / 257
விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில் வெண்ணாவல் மேவிய மேய்ப்பொருளை
நண்ணி இறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொற் றொடையில் வைத்துப் பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப் பரவிநின் றேத்தினர் பான்மையினால்.
மழையார் மிடறா மழுவா ளுடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவா ரும்வெணா வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ யிழையாள் அவளே.
33. 349 / 276
நெடுங்களத் தாதியை அன்பால்"நின்பால் நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்" என்றும் இன்னிசை மாலைகொண் டேத்தி ஏகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள் அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கைவரைஉரித் தார்மகிழ்ந்த காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
34. 350 / 278
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச் செஞ்சடை நம்பர்தங் கோயில் எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக் கண்ணுதலாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள் வைப்பார் "வாருமன் னும்முலை" பாடி வாழ்ந்தார்.
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
35. 354 / 283
"அப்பர் சோற்றுத் துறைசென் றடைவோம்" என்(று)
ஒப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரஞ் செற்ற முன்னவர் கோயில்முன்.
செப்ப நெஞ்செ நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
36. 372 / 292
வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே
"அந்தம் இல்லவர் வண்ணம்ஆ ரழல் வண்ணம்" என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
37. 402 / 504
நிகரிலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள் தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏரா ரிரும்பூ ளையிடங் கொண்டஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண் டகருத்தே.
38. 413 / 318
ஓங்குதிருப் பதிகம், "ஓ டேகலன்"என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால்
"ஈங்கெனைஆ ளுடையபிரான் இடைமருதீ தோ"என்று
பாங்குடைய இன்னிசையாற் பாடிஎழுந் தருளினார்.
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.
39. 425 / 335
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா லடியின்மேல் இருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன் னிசையினால் துதிப்பார்;
மடுத்த காதலில் வள்ளலார் அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித் தஞ்சலி அளித்தார்.
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆடுவதுறை யரனே.
40. 436 / 338
திரைத்த டம்புரற் பொன்னிசூழ் திருத்துருந் தியினில்
"வரைத்த லைப்பசும் பொன்"எனும் வண்தமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந் துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத லார்கழல் பணிந்தார்.
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
41. 447 / 370
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப்பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல் புகன்ற பேத
நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட நாட்டுகின்றார்
"மாதர்மடப் பிடி"பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
42. 456 / 376
உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி நனைஈரம் பெற்றாற்போல
மருவுதிரு மெனிஎலாம் முகிழ்த்தெழுந்த மயிர்ப்புளகம் வளர்க்கு நீரால்
அருவிசொரி திருநயனத் தானந்த வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்"போக மார்த்தபூண் முலையாள்"என் றெடுத்துப் போற்றி.
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
43. 470 / 463
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர் தொழஇருந்த தன்மை போற்றிப்
பொங்கிஎழும் இசைபாடிப் போற்றி சைத்தங் கொருபரிசு புறம்பு போந்தார்.
பைங்கேரட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.
44. 482 / 468
சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற்றானை விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும் பாம்பணையில் துயின்றானும் பரவுங்கோலம்
உடையானை "உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையாள் உள்மெலி(வு)?" என் துரைத்துப் பாட
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
45. 486 / 465
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி யீச்சரத்தார் பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீதுபொங்க உலகர்முன் கொள்ளும் உண்ர்வுநீட
அருவிகண் வார்வுறப் பாடலுற்றார் "அங்கமும் வேதமும்" என்றெடுத்து.
அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யெந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
46. 497 / 485
சொற்பொரு வேந்தருந் தோணி மூதூர்த் தோன்றல்பின் காதல் தொடரத்தாமும்
பொற்புக லூர்தொழுச் சென்றணைந்தார், புகலிப் பிரானும் சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவிவிடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந்தொண்டரோடும் "பாடல் னான்மறை" பாடிப் போந்தார்.
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.
47. 499 / 488
வானுயர் செங்கதிர் மண்டலத்து மருங்கணை யுங்கொடி மன்னும் ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றுந் தயங்கொளி முனகண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் "பருக்கை யானைக்" பதிகத் தமிழிசை பாடியாடித்,
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத் திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரெண்பதே.
48. 500 / 484
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேற் பொலிவதென்ன
எங்குங் குளிரொளி வீசுமுத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறைமலர் கொண்டுதூவித் திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப்பனி வுற்றார் தமிழ்விரகர்.
சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
நன்பொன் மலர்தூவ, இன்வ மாகுமே.
49. 507 / 490
வந்தி றைஞ்சுமெய்த் தொண்டர்தங் குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராஞ் சண்பையர் தலைவர்
"அந்த மாயுல காதியாம்" பதிகம்அங் கெடுத்தே;
எந்தை தான்எனை ஏன்றுகொ ளுங்கொல்"என றிசைத்தார்.
அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
50. 518 / 487
பவனவா ரூரினிற் புறம்புபோந் ததனையே நோக்கிநின்றே
"அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ உய்யுமா றறிதி" அன்றே
"சிவானதா ரூர்தொழாய் நீமற வா(து)"என்று செஞ்கைகூப்பி
"பவனமாய்ச் சோடையாய்" எனுந்திருப் பதிகமுன் பாடினாரே.
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சு தோய்ச் சட்டவுண்டு
சிவன தாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே
கவன மாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காளகண்டன்
அவனதாரூர்தொழு துய்யலாம் மையல்கொண்டஞ்சல் நெஞ்சே.
51. 519 / 450
காழியார் வாழவந் தருள்செயுங் கவுணியப் பிள்ளையார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்ஆ ரூர்பணிந் தரிதுசெல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந் தார்பனை யூர்பணிந்து
வாழிமா மறைஇசைப் பதிகமும் பாடிஅப் பதியில் வைகி.
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.
52. 524 / 455
கும்பிடுங் கொள்கையிற் "குறிகலந்திசை" எனும் பதிகமுன் னானபாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன் பெருமைசால் புறவிளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார் உள்ளமெய்க் காதல்கூர
நம்பர்தம் பதிகளாயினஎனைப் பலவுமுன் நண்ணியே தொழநயந்தார்.
குறிகலந்தஇசை பாடலினான் நசை யாலிவ் வுலகெல்லம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப் பலிபேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம் மொய்ம்மலரின்
பொறிகலந்த பொழில் சூழ்ந்தயலேபுய லாரும் புகலூரே.
53. 532 / 389
பொருவி லாதசொற் "புல்குபொன் னிறம்"முதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவி னார்ந்தகோச் செங்கணான் அந்நகர்ச் செய்தகோ யிலைச்சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர் மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன் பரவினார் பேணிய உண்ர்வோடும்.
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நன்பகலுந்தொழும் அடியவர்க் கருவினை அடையாவே.
54. 532 / 388
பொருவி லாதசொற் "புல்குபொன் நிறம்"முதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவி னார்ந்தகோச் செங்கணான் அந்நகர்ச் செய்தகோ யிலைச்சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர் மாலைஅவ் வள்வனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன் பரவினார் பேணிய உண்ர்வோடும்.
அடையார் புரம்மூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
55. 534 / 362
மற்ற வண்பதி அணைந்துவீ ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு காலனை யுதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன் போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் "சடையுடை யான்எனும் பதிகஇன் னிசைபாடி.
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடையானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டானத்தர னல்லனே.
56. 542 / 405
அப்போ(து) "அரையார் விரிகோ வணஆடை"
ஒப்போ தரும்பதிகத் தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார் தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற் கொண்டு கவுணியனார்.
அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
57. 545 / 401
போற்றிச் "சடையார் புனலுடையான்" என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
ஆற்ற மிகப்பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ் நின்றலைந்து நீடினார்.
சடையார்புன லுடையானொரு சரிகோவணம் உடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
58. 557 / 66
"மைம்மரு பூங்குழல்" என்றெடுத்து மாறில் பெருந்திருத் தோணி தன்மேற்
"கொம்மை முலையினாள் கூடநீடு கோலங்குலவு மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்தகோயில் திகழ்ந்த படிஇது என்கொல்" என்று
மெய்ம்மை விளங்குந் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்.
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேஇமை யாதமுக்கண் ஈசஎன் நேசவி தென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
59. 570 / 408
மற்றைநாள் தம்பிரான் கோயில்புக்கு "வாசிதீர்த் தருளும்"எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி, நற்காசு கொண்டு மாந்தர் பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
"நற்றவத்தீர் இக்காசு சால நன்று ; வேண்டுவன நாந்தருவோம்" என்று நல்க,
அற்றைநாள் தொடங்கி நாட் கூறுதன்னில் அடியவரை அமுதுசெய்வித் தார்வம் மிக்கார்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
60. 573 / 448
நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு பரமர் பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியுல் நண்ணி நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித் திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யுற்பொலி வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததெ.
61 578 / 551
சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும் தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லையில்லா வகை "அர"என் றெடுத்தஓசை இருவிசும்பும் திசைஎட்டும் நிறந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல் உம்பர்நாட் டப்புறத்தும் உற்றதன்றெ.
சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப் புக்கொள்ளுங் கருத்தாலே.
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
(வரிசை எண். பெரியபுராண புத்தகத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பாடல் எண் / திருநாவுக்கரசர் தேவாரப் புத்தக பக்க எண்)
1. 70 / 376
நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறைஅன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியர் மருளும்பிணி மாயை அறுத்திடுவான்,
"கூற்றாயின வாறுவிலக்ககிலீர்" எனநீடிய கோதில் திருப் பதிகம்,
போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால்.
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
2. 93 / 532
"நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
"ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார்.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை,
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற்
சங்கவெண் குழயோர் காதிற் கோமற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே
வடியிணையெ குறுகி னோமே.
3. 98 / 498
வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவெ னிற்பருவம்
தைவருதண் தெண்றல்அணை தண்கழு நீர் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவளர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
4. 104 / 213
"நஞ்சும்அமு தாம்எங்கள் நாதன்அடி யார்க்"கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளங்கும் திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பாலடிசில் மிசைந்திருந்தார்
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
5. 115 / 378
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச்
"சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய எடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார்.
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை
6. 126 / 473
"சொற்றுணை வேதியன்" என்னுந் தூய்மொழி
நற்றமிழ் மாலையா "நமச்சி வாய" என்(று)
அற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
சொற்றுனை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
7. 134 / 408
"ஈன்றாளு மாயெனக் கெ¨ந்தையு மாகி" எனஎடுத்துத்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்(கு)" என்று
வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே
8. 143 / 393
உம்பர்தங் கோனைஉடைய பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த"தென்று
தம்பரி வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
வெறிவிரவு கூவிளனல் தொங்க வானை வீரட்டத் தானை வெள்ளேற்றி னைப்,
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை,
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை,
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
9. 151 / 375
"பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்" என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம் நலஞ்சிறக்கப் பாடுதலும்.
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
10. 168 / 9
இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "என்றெய்தினை" எனமன்றாடும்,
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற்றிடவரும் ஆனந்தம்,
மெய்த்தன்மையினில் விருத்தத் திருழொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்,
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லயுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே.
11. 169 / 6
"பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
"அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வா"றென்(று)
இத்திறம் போற்றி நின்றே இன்றமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனெ பரம யோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாம்
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே
12. 171 / 1
அருட்பெரு மகிழ்ச்சிபொங்க "அன்னம்பா லிக்கும்" என்னும்,
திருக்குறுந் தொகைகள் பாடித்திருவுழ வாரங்கொண்டு,
பெருத்தெழு காதலொடும் பெருந்திருத்தொண்டு செய்து,
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் ற்ம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
13. 173 / 16
சினவிடையே றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே! என்கின்றாள்" என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்ட்மிழ்பாடி அங்குவைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்.
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின்றாளால்
சினபவளத் திண்தோள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால்,
அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால்,
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
14. 174 / 3
மனைப்படப்பிற் கடற்கொழு ந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்குநீங்கி,
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில்,
"நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்த னாரைத்,
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ" எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வோடமாம் அம்பலத் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
15. 175 / 10
"அரியானை" என்றெடுத்தே அடியவருக் கெளியானை அவர்தஞ் சிந்தை,
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்குசோதி,
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்னம்பலத்து மேவி ஆடல்,
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமிழாற்பின்னும் போற்றல் செய்வார்.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்,
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்,
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நளெல்லாம் பிறவா நாளே.
16. 126 / 4
"செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்" எனுஞ்சிறந்த வாய்மை,
அருஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம் படிபாடி அன்பு சூழ்ந்த,
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்,
தஞ்செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம்ப லத்தே
துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி யாடு மாறே.
17. 187 / 32
பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது பேணிவீற்றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தியோடும் "பார்கொண்டு மூடி"எனுப் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல் வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியம்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோஅந்த ணாழி அகலிடமே.
18. 191 / 201
"ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்"என் றளவில் திருத்தாண்டகமுன் அருளிச்செய்து,
மேவுதிருக் குறுந்தோகைநே ரிசையுஞ் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு,
பாவலர்செந் தமிழ்த் தொடையாற் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கெழுந்த பரிவினோடும்,
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப் புரிவுறுகைத் திருத்தோண்டு போற்றிச் செய்வார்.
நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்,
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை,
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடை ந்துய்ந் தேனே.
18. 194 / 167
"கோவாய் முடுகி" என்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவா ரடிகள் என்றலைமேல் பொறித்து வைப்பாய்" எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் "நல்லூரில்
வாவா" என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழுங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
19. 196 / 165
"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல்வைத் தார்"என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதரருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந்(து) ஒழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்,
இனந்துருவி மணிமுகுடத் தேறத் துற்ற இனமல்ர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறெ.
20. 208 / 479
அன்றவர்கள் மறைத்தனுக் களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே
"ஒன்றுகொலாம்" எனப்பதிகம் எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
ஓன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
21. 211 / 80
புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் "சொன்மாலை" பாடினார்.
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
22. 220 / 293
பற்றொன் றிலாவரும் பாதக ராகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவ(து)ஒன்றே?
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்துத் தோண்டராம் புண்ணிய"மென்று
உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்.
குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
23. 222 / 216
கண்டு தொழுது விழுந்து கரசர ணாதி அங்கம்
கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று,
கண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் கதநாகங் கையுடையார் காணீ ரன்றே,
பண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதிவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
24. 223 / 287
"காண்ட லேகருத் தாய் நினைந்(து)" என்னுங் கலைப்பதிகம்-
தூண்டா விளக்கன்ன சோதிமுன் நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்தணைந்தார்.
காண்டலேகருத் தாய் நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோ,
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதி,
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
25. 224 / 283
செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றில் முன்தேவா சிரியன் சார்ந்து,
"கொய்யுமா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்" என்று,
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே,
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக்,
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்தகள்வ னேனே.
26. 226 / 282
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்,
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்,
"பாடிளம் பூதத்தினான்" எனும்பதிகம் முதலான பலவும் பாடி,
நாடியஆர் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்.
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
27. 227 / 295
நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள்திருத் தொண்டின் நன்மைப்,
பான்மைனிலை யால் அவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித்,
தேன்மருவும் கொன்றையார் திருவாரூர் அரனெறியில் திகழுந் தன்மை,
ஆனதிற மும்போற்றி அணிவீதிப் பணிசெய்தங் கமரும் நாளில்.
வேம்பினைப் பேசி விடக்கினை ஓம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே
28. 235 / 288
"சித்தம் நிலாவுந் தென்திரு ஆரூர் நகராளும்
மைத்தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ்செல்வம்
இத்தகை மைத்தென் றென்மொழி கேன்?"என் றருள்செய்தார்
முத்து விதான மணிப்பொற் கவரி" மொழிமாலை.
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆருர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
29. 253 / 238
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி விரவப் பரவுஞ் சொன்மாலை
"செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்" என்(று)
உய்யு நெறித்தாண் டகமொழிந்தங் கொழியாக் காதல் சிறந்தோங்க.
போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலானானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற,
நீரானைக் காற்றானைத் தீயா னானை நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானை திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரெ.
30. 278 / 357
சீரார் பதியி னின்றெழுந்துசெல்லுந் திருநாவுக்கரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறேபோல்
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லுமவர்
பேராளரைமுன் தொடர்ந்தணையப் பெறுவார் எய்தப் பெற்றிலரால்.
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரொ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment